தமிழக மாணவர் அகில இந்திய தரவரிசையில் முதலிடம்... ஜேஇஇ முதன்மை தேர்வில் சாதனை!

 
முகுந்த்

மருத்துவப்படிப்பை படிக்க இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதே போல்பொறியியல் சம்பந்தமான படிப்புக்களுக்கு ஜே.இ.இ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில்  அகில இந்திய தரவரிசையில்  தமிழகத்தை சேர்ந்த முகுந்த் பிரதீஷ் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இவருக்கு  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில்  புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். இவர்  தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகளை இந்தியா  முழுவதும் 11 லட்சம் மாணவர்கள்  எழுதியிருந்தனர். இதில் சுமார் 70000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

 ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
இவர்களுள் அகில இந்திய தரவரிசையில் (300/300) மதிப்பெண் பெற்று தமிழக மாணவர் முகுந்த்  முதல் இடம் பெற்றுள்ளார். இந்தியா முழுவதும் மொத்தம்  23 மாணவர்கள்  முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீசுக்கும்   அவருக்கு ஊக்கமளித்து  உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்கள்,  பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என  பதிவிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web