டாஸ்மாக் பார்களுக்கு புதிய இடவசதி விதி! 100 மீட்டர் சுற்றளவில் அமைக்க தமிழக அரசு அனுமதி

 
பார்

 

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டி மட்டுமே செயல்பட்டு வந்த பார்களுக்கு, தற்போது புதிய இடவசதி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, டாஸ்மாக் கடையின் வளாகத்திலோ அல்லது அந்தக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்ளோ பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மது மதுபான டாஸ்மாக் பார்

புதிய விதிகளின்படி, பார்களுக்கான உரிமம் டெண்டர் முறையில் வழங்கப்படும். ஒவ்வொரு பாரும் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைப்பரப்பைக் கொண்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு குடிநீர், கைகழுவும் வசதி, போதிய மேஜை மற்றும் நாற்காலிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். பார் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சுகாதாரமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும், பாருக்குள் மது அருந்துவது வெளியில் தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். 21 வயதுக்குக் குறைவானவர்களைப் பாருக்குள் அனுமதிக்கவோ, பணியில் அமர்த்தவோ கூடாது.

டாஸ்மாக் மதுபான பார்

வணிக அல்லது தொழிற்சாலைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு தூரக் கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பார்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மூலம் பார் உரிமம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.