பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ? தமிழக அரசின் புதிய திட்டம்!

 
tasmac

 

தமிழகத்தில் இனி பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக்

இந்த நிலையில், பண்டிகைக் காலங்களில் ஏற்படக்கூடிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில், பண்டிகை தினத்தன்றும் அதற்கு முந்தைய நாளிலும் மதுபானக் கடைகளை மூடுவது குறித்து அரசு ஆலோசித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.

டாஸ்மாக்

விடுமுறை நாட்கள் அதிகரிக்க வாய்ப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

எனினும், எந்தெந்த பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும், இந்த நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை இதுவரை வெளியாகவில்லை.