தமிழ்நாடு திரையரங்கு மல்ட்டி பிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜினாமா....!!

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ,ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”இப்பவும் எனது சொந்த வேலை காரணமாக நமது சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ம் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தீபாவளி முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் திரைப்படங்கள் வெளியாகின. இதில் தமிழகத்தில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 1:30 மணிக்கு முடிக்க அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கானின் டைகர் திரைப்படம் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்த நிலையில், அதிகாரிகள் அங்கு அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அனுமதி இன்றி ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரையிடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது சம்பந்தமாக திரையரங்கின் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!