தமிழகத்தில் +2 மாணவர்களின் பெயர் பட்டியல் அக்.16 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - தேர்வுத்துறை உத்தரவு!

 
சக்ஸஸ் உற்சாகம் மாணவி மாணவிகள் பள்ளி வகுப்பறை தேர்வு

தமிழகத்தில் 2026-2027 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அவற்றை மேற்கொள்ளத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவிகள்

பிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள பிழைகளைத் திருத்துவதற்கும், விவரங்களைச் சரிபார்ப்பதற்கும் அக்டோபர் 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் EMIS இணையதளத்தில் கவனமாகச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியானது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளவாறு சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.