தமிழகம் 5 ஆண்டுகளில் முதன்மை மாநிலம்... முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளான்; 3 கட்டங்களாகச் செயல்படுத்த உத்திகள்!

 
முதல்வர் விஜய்

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையுடன், முதலமைச்சர் விஜய் தலைமையில் 'வெற்றித் தமிழகம்' என்ற புதிய வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வரக்கூடிய அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலப் பணிகளும் கால நிர்ணயம் செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளன.

அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், 'வெற்றித் தமிழகம்' என்ற தலைப்பில் 34 துறைகளுக்கான 436 முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் வரும் பணிகள் அனைத்தும் கால நிர்ணயம் செய்யப்பட்டு, 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட உள்ளன. இளைஞர் மேம்பாடு, மகளிர் முன்னேற்றம், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி, லஞ்சமில்லாத நல்லாட்சி மற்றும் போதை இல்லாத தமிழகம் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய் எம்.எல்.ஏ. தவெக

'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் 10 ஆண்டு நெடுஞ்சாலை மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஒருபுறம் மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வரும் வேளையில், தலைநகர் சென்னையை சர்வதேச நகரங்களுக்கு இணையாக மாற்றும் 3-வது மாஸ்டர் பிளான் (2026 - 2046) திட்டத்தை அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் சோகம் யோசனை துயரம் கோபம்

முந்தைய திட்டங்களைப் போலச் சென்னை நகரம் கிடைமட்டமாக விரிவடையாமல், குறிப்பிட்ட பகுதிகளில் 'தரை இடக் குறியீடு' அதிகரிக்கப்பட்டு, நகரம் செங்குத்தாக உயரமான கட்டடங்களுடன் வளர இத்திட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையான கோரிக்கைகள் மற்றும் பொருளாதார நிதிகளைப் பெறுவதற்கும், மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் இந்த 'மாஸ்டர் பிளான்' முக்கியப் பங்காற்றும் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.