கேரளாவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தமிழக சுற்றுலா பேருந்து; 21 பேர் பயணம் – 5 பேர் காயம்!

 
விபத்து

 

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பேருந்து, கொல்லம் மாவட்டம் கும்பவருட்டி அருகே விபத்துக்குள்ளானது. மலைப்பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

Kakkoor bus accident: Wedding group bus overturns in Kerala, 35 injured, four of them serious - India Today

இந்தப் பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் பயணம் செய்துள்ளனர். இன்று (நவம்பர் 9) காலை சுமார் 9 மணியளவில் விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கவிழ்ந்ததில் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்