இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி! சின்ன வெங்காயம், பூண்டு விலை திடீர் உயர்வு!
Nov 19, 2026, 11:35 IST
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் விலை இருமடங்காக அதிகரித்து கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மழை காரணமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், சந்தைகளுக்கு வரும் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

அதேபோல், பூண்டின் விலையும் உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய விளைச்சல் இன்னும் சந்தைக்கு வராததால், இந்த விலை உயர்வு உடனடியாக குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய விளைச்சல் சந்தைக்கு வருவதில் காலதாமதம் ஏற்படுவதால், அடுத்த சில நாட்களுக்கும் காய்கறிகளின் விலை உயர்ந்தே நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
