பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசம்... தமிழக அரசின் வெற்றி ஆடு வளர்ப்பு திட்டம்!
தமிழக அரசின் ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தின்’ கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் முழு மானியத்தில் வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் சுயதொழில் வாய்ப்புகள் உருவாகி, பயனாளிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஆடு வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறை, தகுதிகள் மற்றும் தேர்வு விவரங்களை சம்பந்தப்பட்ட அரசு அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
