தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
மழை

 

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று (அக்.27) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

அக்.29, 30 ஆகிய தேதிகளிலும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.