தமிழகத்தின் ரயில்வே திட்டம்.. ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தகவல்!

 
அஸ்வினி வைஷ்ணவ்

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  காங்கிரஸ் அரசை விட 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 33,467 கோடி செலவில் 2,587 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுமார் 1,302 கிமீ புதிய ரயில் பாதைகள் போடப்படுகின்றன. விமான நிலையங்களுடன் சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களை செயல்படுத்த 2000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ரயில்வே திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு காலதாமதம் செய்கிறது. தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web