நவம்பர் 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை... வணிக நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 5, 2026, 17:10 IST
தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த கட்டாய உத்தரவை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தக சங்கம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
