துணை ஜனாதிபதி டெல்லி இல்லத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. பிரதமர் மோடிக்கு முருகர் படம் பரிசளிப்பு!

 
மோடி மோடி

தமிழ் புத்தாண்டையொட்டி, டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இல்லத்திற்குப் பிரதமர் மோடி திடீர் வருகை தந்தார். அங்குள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி படங்களுக்குத் தீபாராதனை காட்டி மெய்மறந்து வழிபட்டார்.

வழிபாட்டிற்குப் பிறகு, சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரதமருக்குத் தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.


"தமிழ் இலக்கியம், இசை, கலை, பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகிற்கே உத்வேகம் அளிக்கிறது" எனத் தனது வாழ்த்துச் செய்தியில் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் புத்தாண்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கட்டும் என்றும், தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவோம் என்றும் பிரதமர் தமிழில் பதிவிட்டுள்ளார்.

ம்ோ

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் உச்சத்தில் இருக்கும் வேளையில், பிரதமர் மோடி 'முருகன்' படத்தைப் பரிசாகப் பெற்றிருப்பதும், தமிழில் வாழ்த்துத் தெரிவித்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "இன்று காலை நட்டா வெளியிடும் பாஜக தேர்தல் அறிக்கையிலும் 'ஆன்மிகம் + வளர்ச்சி' கலந்த அதிரடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!"