தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

 
தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி வர இருக்கிறது. அன்றைய தினம் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளும் கூட. இதை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நோக்கில் கடந்த 2020 மார்ச் மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தின.

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் வரவும், கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள் மட்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வைரஸ் தொற்று குறைந்ததால் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கலாம் என அரசு அறிவித்தது.

தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் அனைத்து அலுவலகங்களும், பணியிடங்களும் முழு வீச்சில் செயல்பட தொடங்கின. கிடப்பில் போடப்பட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதனால் வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வழக்கம் போல வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் அலுவலகங்கள் இயங்குவதற்கு உத்தரவிடப்பட்டது.

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் அரசு விடுமுறைகளும் வழக்கம் போல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி நாடு முழுவதும் அன்றைய தினம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

dinamaalai.com

From around the web