லஞ்சம் கேட்டா உடனே புகார் கொடுங்க... வாட்ஸ்அப் உதவி எண் அறிவிப்பு... !

 
vijay

 

அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளை முழுமையாகத் தடுத்து நிறுத்தும் நோக்கில், பொதுமக்கள் எளிமையான முறையில் தங்களின் புகார்களைத் தெரிவிக்கப் புதிய வாட்ஸ்அப் உதவி எண் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கீழ் செயல்படும் இந்தத் தார்மீகத் திட்டம் குறித்து மாநிலத்தின் அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் ஒரு முக்கியச் சுற்றறிக்கையை முறைப்படி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் உதவி எண்ணான 94981 80936 என்ற எண் அனைத்து அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் தெளிவாக இடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் நியாயமான புகார்களை எவ்வித பயமும் இன்றி நேரடியாகத் தெரிவிக்க ஏதுவாக இந்த ஏற்பாடு அனைத்து மாவட்டங்களிலும் எளிய முறையில் செய்யப்பட உள்ளது.

மேலும் இந்த வாட்ஸ்அப் உதவி எண்ணுடன் சேர்த்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கான நேரடி இணைப்பும் (லிங்க்) அந்தந்தத் துறை இணையப் பக்கங்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சாய் குமார் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ள இந்த   நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.