5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்... முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

 
கீழடி

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த அருங்காட்சியகங்கள் கீழடி மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.39 கோடி செலவீட்டில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில், “இரும்பின் தொன்மை” எனும் ஒரு நூலையும் முதல்வர்  வெளியிட்டார்.

கீழடி

இது  குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிடுகையில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை தமிழ்நாடு முதல்வர்  முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் எனக் கூறியிருந்தார். 
அதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு  டாலின் அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய  ஸ்டாலின்,  தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் தொன்மை தொடங்கியது.  

முதல்வர் ஸ்டாலின்


5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். கீழடியில் கிடைத்த இரும்பு பொருட்கள் கதிரியக்க  கால கணக்கெடுப்பு முடிவின்படி கி.மு 3345 தொன்மையானது. கி.மு 3,345 தமிழகத்தில் இரும்பு அறிமுகமாகியுள்ளது. "5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள் தான். இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்” என கூறினார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!