கனமழை... தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... உதவி எண்கள் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் மழை வெளுத்து வாங்குகிறது.

மேலும், தாமிரபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கலியாவூர் முதல் புன்னக்காயல் ஆற்றங்கரை பகுதிகளில் செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையை 1800 203 0401 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்று கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த உதவிகள் வேண்டுமானாலும் மாநகராட்சி அதிகாரிகளும், அலுவலா்களும், பணியாளா்களும் உடனடியாக செய்து தருவதற்கு தயாராக உள்ளனா் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
