மாணவர்களே செக் பண்ணிக்கோங்க... டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 
டான்செட்

 அண்ணா பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும்  அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் தேர்வுகள் எழுத வேண்டியது அவசியம். இந்த டான்செட் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில்  2024ல்  மார்ச் 9ம் தேதி டான்செட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் எம்சிஏ, எம்பிஏ, எம்டெக், எம்ஆர்க் உட்பட  முதுநிலை பொறியியல், மேலாண்மை நுழைவுத்தேர்வை 36,139 பேர் எழுதியுள்ளனர்.

செமஸ்டர்


இதற்கான இறுதி விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று டான்செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

அண்ணா பல்கலை கழகம்

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  தகுதியானவர்கள், கவுன்சிலிங் செயல்பாட்டிற்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 3 முதல் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web