தங்கலான் ஓடிடியில் வெளியானது !
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தங்கலான் திரைப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தங்கச் சுரங்கத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு உதவச் சென்ற குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொண்ட பிரச்னைகளாக இப்படம் உருவாகியுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற தங்கலான் படம், உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.இந்நிலையில், தங்கலான் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்காக ரசிகர்கள் நீண்ட நாள்கள் காத்திருந்த நிலையில், தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
