மின்கட்டண உயர்வு புகார் - நடிகை வைஷாலியின் குற்றச்சாட்டிற்கு TANGEDCO விளக்கம்!

 
வைஷாலி

கடந்த 2-3 மாதங்களாகத் தமிழ்நாட்டில் சாமானிய மக்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வருவதாகவும், தனக்கும் அதேபோல மின்கட்டணம் உயர்ந்து வந்துள்ளதாகவும் நடிகை வைஷாலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பரவி வரும் மின்கட்டண உயர்வு வதந்திகளுக்குத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விரிவான விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்தவிதப் புதிய உயர்வுமே செய்யப்படவில்லை என்றும், வழக்கமான விதிகளின்படியே கட்டணம் கணக்கிடப்படுகிறது என்றும் மின்சார வாரியம் மறுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

கோடைக்காலம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வீடுகளில் மின்சாதனப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதே கட்டணத் தொகை உயர்ந்து வருவதற்கு முதன்மையான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்து  கட்டணம் மாறுபடும் என்பதால், பயன்பாடு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது கட்டணமும் அதற்கேற்ப உயர்கிறது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மின் நிர்மல்குமார்

பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மின் பயன்பாடு குறித்த சந்தேகங்கள் இருந்தால் அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தையோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.