தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராகத் தாரகை கத்பர்ட் நியமனம்!

 
தாரகை கத்பர்ட்

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராகக் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராகச் செயல்பட்டு வந்த ராஜேஷ்குமார், புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவி காலியானது. இதனையடுத்து, குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்கு வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை  கைது!

சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளை எழுப்புவது மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைச் பேரவையில் வெளிப்படுத்துவது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.