முக்குலத்தோர் மக்களுக்கு டார்கெட்... தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்கிறார் முதல்வர் விஜய்!

 
தேவர்

வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் குருபூஜை

பாரம்பரியமாக அதிமுகவுக்கு ஆதரவாகக் கருதப்படும் முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவைத் தன் பக்கம் ஈர்க்கும் அரசியல் கணக்குடன் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேவர்

இதனிடையே, அண்மையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குருபூஜை விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்காத நிலையில், தற்போது தேவர் ஜெயந்தி விழாவிற்கு மட்டும் அவர் செல்வது சில விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுக்கலாம் எனத் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவரிடம் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.