2,00,000 நாய்களுக்கு தடுப்பூசி இலக்கு... இன்று சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

 
தெருநாய் நாய் ரேபிஸ்

வெறிநாய்க்கடி நோய் இல்லாத சென்னை மாநகரை உருவாக்கும் நோக்கில், அனைத்துத் தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

தெருநாய்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று நாய் பிடிக்கும் பணியாளர்கள் மூலம் வலை வீசிப் பிடிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்களால் தடுப்பூசி செலுத்தப்படும். அடையாளம் காண இயற்கைச் சாயம் (பூசப்பட்டு மீண்டும் பிடித்த இடத்திலேயே விடுவிக்கப்படும். தெருநாய்கள் மட்டுமின்றி, வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் பொதுமக்கள் இம்முகாமில் இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

நாய் தெருநாய் வெறிநாய்

நாள் ஒன்றுக்கு ஒரு குழு 100 நாய்கள் வீதம், 30 குழுக்கள் மூலம் தினசரி சுமார் 3,000 தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க ஊசி செலுத்தி "வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை" என்ற இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று முதல் மண்டலம் 1 (14 நாட்கள்), மண்டலம் 2 (9 நாட்கள்) மற்றும் மண்டலம் 4 (14 நாட்கள்) ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்துத் தெருக்களிலும் உள்ள நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும்.

தெருநாய் நாய்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் அமைப்பின் ஒத்துழைப்புடன் இம்முகாம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.