டாஸ்மாக் பணியாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவத் திட்டம் அமல் - நிர்வாகம் ஒப்புதல்!

 
டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு சார்பில் இஎஸ்ஐ (ESI) காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்திருந்த நிலையில், அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைத்துப் பணியாளர்களையும் இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டாஸ்மாக்

டாஸ்மாக் இயக்குநர் நந்தகுமார் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களின் விவரங்களையும் இஎஸ்ஐ இணையதளத்தில் விரைவாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஎஸ்ஐ திட்டத்தின் பலன்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நிதி தொடர்பான பணிகளுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான மாதாந்திர பங்களிப்புத் தொகையை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் தவறாமல் இஎஸ்ஐ கணக்கில் செலுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இந்நடவடிக்கை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் மருத்துவக் காப்பீடு மற்றும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு நலன்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.