டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்பனைக்குத் தடை - டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை!

 
 டாஸ்மாக் சிகரெட்

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பார்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், சுகாதார நடைமுறைகளை உறுதி செய்யவும் பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்ய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான பார்

பார்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அனைத்தும் உரிய தரச்சான்று பெற்ற நிறுவனங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். மதுக்கடைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்களும் செயல்பட வேண்டும். நேர வரம்பை மீறி பார்களைத் திறந்திருக்கக் கூடாது.

இந்த விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறும் பார் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும், உரிம ரத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.