தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

 
டாஸ்மாக்

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியைக் முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும். அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 10:00 மணி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி மதியம் 12:00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போதை டாஸ்மாக்

உரிமம் பெற்ற தனியார் ஓட்டல் பார்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனைக்கூடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவை மீறி யாராவது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.