தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

 
டாஸ்மாக்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல்  ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 ம் தேதி  7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவினை அடுத்து    வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!
இதனையடுத்து  தேர்தல் ஆணையம்  ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிரவாகன சோதனைகள்  நடத்தப்பட்டு வருகின்றன.  இதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வாக்குப்பதிவு நடக்கும் தினத்திலும், அதற்கு முந்தயை தினத்திலும் அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்  அதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் அதாவது ஜூன் 4ம் தேதி  டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web