3 நாட்களுக்குப் பின் டாஸ்மாக் கடைகள் திறப்பு... 'சரக்கு' வாங்க அலைமோதிய கூட்டம் - கோடை வெயிலுக்கு பீர்கள் காலி!

 
குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த 21-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி வரை, தொடர்ந்து மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தேர்தல் விதிகளின்படி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் கடும் தவிப்புக்குள்ளாகினர். பலர் முன் எச்சரிக்கையாகச் சரக்குகளை வாங்கிப் பதுக்கியிருந்தாலும், பெரும்பாலானோர் கள்ளச்சந்தையில் ஒரு குவார்ட்டர் பாட்டிலை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கிய அவலமும் அரங்கேறியது. இந்த நிலையில், 3 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மதியம் 12 மணிக்குக் கடைகள் திறக்கப்பட்டன.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

கடை திறப்பதற்கு முன்பே பல இடங்களில் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் தவம் கிடக்கத் தொடங்கினர். ஷட்டர் திறக்கப்பட்டவுடன் முண்டியடித்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்தமான பிராண்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். குறிப்பாக, தற்போது தமிழகம் முழுவதும் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே வெயில் வாட்டி வதைத்து வருவதால், மதுப்பிரியர்களின் கவனம் 'பீர்' பக்கம் திரும்பியுள்ளது. இதனால் மற்ற மதுபானங்களை விட சில்லென்று இருக்கும் பீர்களின் விற்பனை அசுர வேகத்தில் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பல கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த பீர்கள் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

டாஸ்மாக்

விடுமுறை நாட்களில் ஏற்பட்ட தாகத்தைத் தீர்க்க மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டதால், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை நேரங்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் கவுண்ட்டர்கள் சில இடங்களில் திறக்கப்பட்டன. 3 நாள் தடையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, நேற்று ஒரே நாளில் ஈடுகட்டப்படும் அளவிற்கு விற்பனை களைகட்டியது. தேர்தல் காய்ச்சல் முடிந்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் நிர்வாகம் பெரும் நிம்மதி அடைந்துள்ளது.