நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

 
டாஸ்மாக்

நாளை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட சில தினங்களை தவிர வருடத்தின் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் உள்ளூர் பண்டிகைகள் , திருவிழாக்கள், போராட்டங்கள், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு, மே தினம், சுதந்திர தினம் உட்பட சில நாட்களில் மட்டுமே  டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

அதன்படி நாளை ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை கோலாகலமாக கொண்டாடவும், வீட்டில் தேசியக்கொடி ஏற்றி அதனுடன் சேர்ந்து செல்பி எடுத்து பதிவிடும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம்   முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

இந்த உத்தரவில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்.  தவறுபவர்கள் மீது  துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உணவகங்கள்  மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூடவும் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web