டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் - மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

 
டாஸ்மாக்

அரசு நிர்ணயித்த விலையைவிட மதுபாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்த புகார்களின் அடிப்படையில், மேலும் 150 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையைவிட பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் வந்தன. இதற்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

டாஸ்மாக் அமைச்சர் விக்னேஷ்

அரசு நிர்ணயித்த விலையை மீறி கூடுதல் பணம் வசூலித்ததாக வந்த புகார்களின் பேரில், நேற்று 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 150 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.