டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் ₹10,000 அபராதம் - டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

 
டாஸ்மாக் மதுபாட்டில் பாட்டில்

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் எச்சரித்துள்ளார்.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும். விதிக்கப்படும் அபராதத் தொகையில் 60 சதவீதத்தை விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை சம்பந்தப்பட்ட கடையின் மேற்பார்வையாளரும் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகள்:

முதல் முறை தவறு செய்தால் 1 மாதம் தற்காலிகப் பணிநீக்கம், இரண்டாம் முறை தவறு செய்யும் பட்சத்தில் 3 மாதங்கள் தற்காலிகப் பணிநீக்கம்  மற்றும் மூன்றாம் முறை தவறு செய்தால் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, சட்டப்பூர்வ குற்றக் குறிப்பாணை வழங்கப்படும்.