டாஸ்மாக் காலி பாட்டிலுக்கு ரூ.10 திரும்ப கிடைக்கும்! தமிழகம் முழுவதும் புதிய திட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி டாஸ்மாக் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் (MRP) கூடுதலாக ரூ.10 சேர்க்கப்படும் என்று கூறினார். மதுபானத்தைப் பயன்படுத்திய பிறகு காலி பாட்டிலை தமிழகத்தில் உள்ள எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் ஒப்படைத்து அந்த ரூ.10-ஐத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதற்காக காலி மதுபாட்டில்களைச் சேகரிக்கும் 4,048 'ரிவர்ஸ் வெண்டிங்' இயந்திரங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த இயந்திரங்கள் மூலம் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாட்டில்களைச் சேகரிப்பதையே ஒரு தொழிலாக மாற்றும் வாய்ப்பும் உருவாகும் என்று அமைச்சர் கூறினார்.இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, காலி மதுபாட்டில்களை வீசாமல் திரும்ப ஒப்படைக்கும்
