நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாத் நபிப் பண்டிகையைக் முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 26ம் தேதி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் கட்டாயம் மூடப்படும் எனச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் சாகடே அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை உரிமம் பெற்ற கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் அனைத்து வகையான மதுபான விற்பனையகங்களும் நாளை (புதன்கிழமை) முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மிலாத் நபி தினத்தன்று எந்தவொரு மதுபான விற்பனையும் நடைபெறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நாளை மறைமுகமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மதுபானங்களை விற்பனை செய்தால், மதுபான விற்பனை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மிலாத் நபியை முன்னிட்டுத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ட்ரை டே விதிகளின் படி நாளை மாநிலம் முழுவதும் இந்த டாஸ்மாக் கடைகள் அடைப்பு அமலில் இருக்கும்.
