பேச்சுவார்த்தைக்கு பிறகும் வேலைக்கு வரல.. 33 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்!

 
டாஸ்மாக்

 

தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் பணிக்குத் திரும்ப மறுத்த டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் முப்பத்து மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவையும் மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

அதிகாரிகளின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விக்னேஷ்

நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.