“சிக்கன், மட்டனை விட மனித மாமிசம் தான் டேஸ்ட்... “ அதிர வைத்த யூடியூபர்!

 
 நிக்கோ கிளாக்ஸ்

”சிக்கன், மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது” என்று யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, எப்போது மனித மாமிசம் சாப்பிட்டார்? எப்படி கிடைத்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பல வகையான விலங்குகளின் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் கோழி மற்றும் ஆட்டிறைச்சியை உண்கிறார்கள். மத்திய கிழக்கு அரபு நாடுகளில், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை மக்கள் உண்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களிலும் மாட்டிறைச்சி உண்டு. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நாய் இறைச்சி விரும்பப்படுகிறது. 

இறைச்சி

தாய்லாந்தில் முதலை இறைச்சி தற்போது உணவாக உட்கொள்ளப்படுகிறது. மனிதர்கள் மற்ற விலங்குகளை உண்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் மனித இறைச்சியை உண்பதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நரமாமிசம் உண்ணும் அகோரிகள் குறித்த செய்தி கிடையாது. சாதாரண மனிதர் ஒருவர் இது போன்ற ஒரு சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவர் மனித இறைச்சியின் சுவை பற்றி பேசியுள்ளார். அவரது பெயர் நிக்கோ கிளாக்ஸ். மனித இறைச்சியை சாப்பிட்ட குற்றச்சாட்டில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவர், ஒரு வீடியோவில் மனித இறைச்சியின் சுவை பற்றி பேசியுள்ளார். அதில் கோழி மற்றும் ஆட்டிறைச்சியை விட மனித இறைச்சியை விரும்புவதாகக் கூறி இருக்கிறார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web