அதிர்ச்சி... காம்பவுண்ட் சுவரை இடித்து வீட்டிற்குள் புகுந்த டாரஸ் லாரி, டிராக்டர்... அலறி அடித்து வீட்டை விட்டு ஓடி வந்த குடும்பத்தினர்!

 
லாரி டிராக்டர்

 விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கங்காராஜ் மகன் காளைச்சாமி. 31 வயதான இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு  டாரஸ் லாரியை ஓட்டி வந்தார். வெள்ளமடத்தை அடுத்த லாயம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது, லாரி  திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

விபத்து

இதனால் லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதி அத்துடன் நில்லாமல் அருகில் உள்ள  காம்பவுண்ட் சுவரை இடித்து வீட்டின் உள்ளே புகுந்தது.வீட்டு காம்ப்பவுண்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மற்றும் பைக் மீதும் மோதி நின்றது.  டாரஸ் லாரி மோதிய டிராக்டர் வீட்டின் பில்லர் மீது மோதி நின்றது. வீட்டிற்குள் இருந்தவர்கள் இந்த திடீர் சத்தம் கேட்டு அதிர்ச்சியில் ஓடி வந்து அலறி அடித்தபடியே வீட்டை விட்டு வெளியில் வந்தனர்.  

ஆம்புலன்ஸ்

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்  விபத்தை ஏற்படுத்திய டாரஸ் லாரியை காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் லாரி டிரைவர் காளைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web