ஓமனுடன் வரி இல்லாத வர்த்தகம் - தமிழக ஜவுளித்துறைக்கு புதிய வாய்ப்பு!

 
ஜவுளித்துறை திருப்பூர் நெசவு நூல் மில் காட்டன் பின்னலாடை ஜவுளித்துறை திருப்பூர் நெசவு நூல் மில் காட்டன் பின்னலாடை

மத்திய அரசு ஓமன் நாட்டுடன் மேற்கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 1 முதல் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிரடி மற்றும் ராஜதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பின்வரும் முக்கியச் சலுகைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 99.38% பொருட்களுக்கு இனி எவ்வித இறக்குமதி வரியும் விதிக்கப்பட மாட்டாது. இதனால் இந்தியப் பொருட்கள் ஓமன் சந்தையில் மிகக் குறைந்த விலையில், சர்வதேசப் போட்டியாளர்களுடன் எளிதாகப் போட்டியிட முடியும்.

திருப்பூர்

குறிப்பாக, இந்திய ஜவுளிப் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் மீது ஓமன் அரசு இதுவரை விதித்து வந்த 5% இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் லாபத்தையும், புதிய வர்த்தக ஆர்டர்களையும் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் ஜவுளி மற்றும் நூல் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு, இந்த ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய பொருளாதார உத்வேகத்தை அளிக்கப் போகிறது.

மாஞ்சா நூல்

பின்னலாடை நகரமான திருப்பூர், ஜவுளி மற்றும் நூல் உற்பத்திக்கு புகழ்பெற்ற கோவை, மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களுக்கு உலகளவில் பெயர்பெற்ற கரூர் போன்ற தமிழகத்தின் முதன்மை ஜவுளி கேந்திரங்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் ஆடை வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் ஓமன் மற்றும் அதன் வழியாக மற்ற அரபு நாடுகளுக்கும் தங்களது வர்த்தக எல்லையை விரிவுபடுத்த இது வழிவகுக்கும்.