அதிர்ச்சி வீடியோ... ரயில் கழிப்பறையில் கழுவப்படும் டீ கேன்..!

 
ரயில் கழிப்பறை


பொதுவாக ரயில் பயணம் பலருக்கு மறக்கமுடியாத நினைவுகளாக மாறிவிடுவதுண்டு.  ஆனால் இந்தியாவில் சமீபகாலமாக ரயில் பயணங்கள் குறித்த கசப்பான அனுபவங்களும் குற்றச்சாட்டுக்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது ரயில் கழிப்பறையில் டீ விற்கும் கேனை கழுவிய காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகின்றது. வந்தே பாரத் உட்பட பல்வேறு ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமின்றி இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், ரயிலின் கழிப்பறைக்குள் டீ விற்கும் கேனை கழுவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  பரவி பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆயூப் என்பவர் பகிர்ந்த விடியோவில், டீ விற்பனையாளர் ஒருவர் ரயிலின் கழிவறைக்குள் நின்று அங்குள்ள குழாயில் வரும் தண்ணீரால் டீ கேனை கழுவிக் கொண்டிருக்கிறார். இதன்தொடர்ச்சியாக பிளாஸ்டிங் தண்ணீர் பாட்டிலில் இருந்த டீ-யை கேனில் ஊற்றும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

ரயில்


இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும்  கண்டனங்களை பகிர்ந்து, பொதுப் போக்குவரத்தில் விற்கப்படும் உணவின் சுகாதாரத்தன்மை குறித்து ரயில்வே துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்த காட்சிகள் எந்த ரயிலில், எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படாத நிலையில், இதன் உண்மைத்தன்மை குறித்தும் ரயில்வே நிர்வாகம்  இதுவரை எந்த விளக்கமும்  அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web