கண்டெய்னரில் மோதி ஆசிரியை பலி... இறப்பதற்கு முன் தற்கொலைச் செய்து கொள்ளப்போவதாக பேச்சு!
கேரள மாநிலம் பத்தனம்திட்டாம் மாவட்டத்தில் அடூரில் கார் மற்றும் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை மர்மம் நீடித்து வருகிறது.
நேற்றிரவு நிகழ்ந்த இந்த விபத்தில் தும்பமண் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை அனுஜா (37), தனியார் பேருந்து ஊழியர் ஹாசிம் (31) ஆகியோர் உயிரிழந்தனர். குடிபோதையில் இருந்த ஹாசிம், அனுஜாவுடன் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக காரை கண்டெய்னர் லாரி மீது மோதியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என போலிசார் தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பின்னர், அனுஜா தனது சக ஆசிரியர்களுடன் சுற்றுப்பயணத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, ஹாஷிம் அவர்களின் பேருந்தை வழியில் தடுத்து, அனுஜாவைத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார். பேருந்தில் அனுஜாவுடன் சென்ற சக ஊழியர்கள், அவர் ஹாஷிமுடன் செல்ல தயங்குவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஹாசிம்மைத் தனது உறவினர் என்று அனுஜா அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அனுஜாவை ஹாசிம் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
“அனுஜா எதிர்பாராதவிதமாக தனது உறவுக்கார பையனுடன் பாதியில் சுற்றுலாவில் இருந்து வெளியேறியதால் வருத்தமடைந்த அனுஜாவின் தோழிகள், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இந்த தொலைபேசி உரையாடலின் போது, ஹாஷிமுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அனுஜா, தனது தோழிகளிடம் கூறியுள்ளார். அதன் பின்னர், பேருந்தில் இருந்த ஆசிரியர்கள் அனுஜாவைத் தேடி விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர்” என்று போலீசார் தெரிவித்தனர்.
ஹாஷிமின் காரில் மதுபான பாட்டில்கள் காணப்பட்டதாக தெரிவித்தார். இதற்கிடையில், அனுஜாவின் குடும்பத்தினர் ஹாஷிமை சந்திக்கவில்லை என்றும் கூறினர். தகவல்களின்படி, அனுஜா விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார், ஹாஷிம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!