நீண்ட நாள் தோழி பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்த இளம் செவிலியர் ஒருவர், தனது நெருங்கிய தோழி தன்னிடம் பேச மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (20). இவர் திருநெல்வேலி (நெல்லை) சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபல தனியார் கண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் நெல்லை சந்திப்பு பகுதியிலேயே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 13-ம் தேதி அன்று சண்முகப்பிரியா தான் தங்கியிருந்த விடுதி அறையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவைத் தட்டிப் பார்த்தும் எவ்வித பதிலும் இல்லாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சண்முகப்பிரியா அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீசார், சண்முகப்பிரியாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

பள்ளி மானவி தற்கொலை

அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் விடுதி தோழிகளிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. சண்முகப்பிரியாவிற்கு மிக நெருங்கிய தோழி ஒருவர் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தத் தோழி சண்முகப்பிரியாவுடன் சரியாகப் பேசாமல், அவரைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தன்னிடம் உயிருக்கு உயிரான தோழி பேசாமல் போனதால் கடந்த சில தினங்களாகவே சண்முகப்பிரியா மிகுந்த மன வேதனையிலும், கடுமையான மன அழுத்தத்திலும் இருந்துள்ளார். இந்தத் தீவிர மன உளைச்சலின் காரணமாகவே அவர் தனது விடுதி அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.