கன்னியாகுமரியில் காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை - பதிலடியாக இளைஞர் அடித்துக் கொலை!

 
காதல் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில், அதற்குக் காரணமான இளைஞரைப் பெண்ணின் உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் என்ற இளம்பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

ஏஞ்சலுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ஆண்டனி என்பவர் மீது, கடந்த மே மாதம் ஏஞ்சலின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைச் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் மீண்டும் ஏஞ்சலுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏஞ்சலின் உறவினர்கள், ஆண்டனியைக் கற்களால் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், உயிரிழந்த ஏஞ்சல் மற்றும் ஆண்டனி ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.