ஸ்கூட்டி மீது பேருந்து மோதி கோர விபத்து -- இளம்பெண் உயிரிழப்பு; குழந்தைகள் படுகாயம்!

 
விபத்து இளம்பெண் முஸ்லிம் பர்தா

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் பகுதியில், சாலையின் தவறான திசையில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று இருசக்கர வாகனமான ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 35 வயது பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது இரண்டு சிறு குழந்தைகளும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரம் மாவட்டம் தனலூர் பகுதிக்குட்பட்ட வலியபாடத்தைச் சேர்ந்தவர் தேஸ்னி (வயது 35). இவர் கடந்த திங்கட்கிழமை மாலை தனது குழந்தைகளான பாத்திமா ஷேசா (14) மற்றும் ஷேசான் முஸ்தபா (8) ஆகியோருடன் ஸ்கூட்டரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

நேற்று மாலை சுமார் 7 மணியளவில் திருர் பகுதியில் உள்ள பூக்கையில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இக்கோர விபத்து அரங்கேறியுள்ளது. கூட்டைப் பகுதியிலிருந்து திருர் நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று, போக்குவரத்து விதிகளை முற்றிலும் மீறிச் சாலையின் தவறான பகுதிக்குள் நுழைந்துள்ளது. எதிர்பாராதவிதமாக அந்தத் திசையில் வந்த தேஸ்னியின் ஸ்கூட்டர் மீது அந்தப் பேருந்து பயங்கரமாக மோதியது.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

பேருந்து மோதிய வேகத்தின் தாக்கத்தால், தேஸ்னி மற்றும் அவரது குழந்தைகள் பயணம் செய்த ஸ்கூட்டர் தூக்கி வீசப்பட்டுப் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது. இக்கோர விபத்தில் பலத்த காயமடைந்த தேஸ்னி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் ஸ்கூட்டரில் பயணித்த சிறுமி பாத்திமா ஷேசா மற்றும் சிறுவன் ஷேசான் முஸ்தபா ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, தீவிர சிகிச்சைக்காகக் கோட்டக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விபத்து நடந்தவுடன் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டார்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

தகவலறிந்த திருர் காவல்துறையினர் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், விபத்திற்குக் காரணமான அந்தப் பேருந்தைக் காவல்துறையினர் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கைப்பற்றினர். தலைமறைவாகியுள்ள பேருந்து ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  விதிகளை மீறி  தவறான திசையில் வாகனத்தை இயக்கியதன் காரணமாக ஒரு தாயின் உயிர் பறிபோன இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.