விமானத்தில் திடீரென உள்ளாடையைக் கீழிறக்கிய இளம்பெண்... போதையில் அட்டூழியம் செய்ததால் சிறைத் தண்டனை!

 
இளம்பெண் விமானம் விமானத்தில் போதை

அமெரிக்காவில் இருந்து புளோரிடா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில், மதுபோதையில் சக பயணிகள் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்ட இளம்பெண்ணைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து புளோரிடா மாகாணத்தை நோக்கிப் பயணித்த வணிக விமானம் ஒன்றில் சாரா பார்க்கர் என்ற இளம்பெண் பயணித்துள்ளார். பயணத்தின் போது அதிகளவில் மது அருந்தியிருந்த அவர், கடுமையான போதையில் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துள்ளார். தொடர்ந்து சக பயணிகள் முன்னிலையில் தனது உள்ளாடையைக் கீழே இறக்கிப் பிறப்புறுப்பைக் காட்டி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சாரா பார்க்கரின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியடைந்த சக பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் கடும் மன உளைச்சலும் இடையூறும் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, பாதுகாப்பு காரணங்களைக் கருதி விமானம் நடுவழியிலேயே பாதை மாற்றப்பட்டு இங்கிலாந்திற்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தைச் திடீரெனப் பாதை மாற்றித் தரையிறக்கியதால், விமான நிறுவனத்திற்கு சுமார் 26,300 அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சாரா பார்க்கரின் அநாகரிகச் செயலால் சக பயணிகளுக்குக் கடுமையான மன உளைச்சலும் இடையூறும் ஏற்பட்டது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். விமானப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விளைவித்தது மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக அவருக்கு விரைவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.