சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் மரணம்... 4 கி.மீ இழுத்துச் சென்ற கொடூரம்!

 
சிறுத்தை
உதய்பூரில் சிறுத்தை கொடூரமாக தாக்கியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உதய்பூர், கோகுந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உண்டித்தல் கிராமத்தில் நேற்று காலை சிறுத்தை ஒன்று தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிராமத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச் சென்ற சிறுத்தை, இளம்பெண்ணின் கையை கவ்வியது. பின்பு முகம், முதுகு, மார்புப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நேற்று காலை முதல் இளம்பெண்ணைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று அடர்ந்த காட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டது.

சிறுத்தை

இது குறித்து கோகுண்டா காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று காலை 8:30 மணியளவில் அம்பலால் மகள் கமலா (18) உண்டிதால் கிராமத்தின் காட்டில் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் கவலையடைந்தனர். இரவு முழுவதும் கிராம மக்கள் உதவியுடன் கமலாவைத் தேடியும் பலனில்லை. இன்று காலையில், குடும்பத்தினரும், கிராம மக்களும் காட்டுக்குள் சென்று தேடியபோது இளம்பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்தனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறினார். 

சிறுத்தை

இந்த சம்பவத்தையடுத்து, சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வனப்பகுதியில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதால், ஆம்புலன்ஸோ, வாகனமோ செல்ல முடியவில்லை. எனவே, இளம்பெண்ணின் உடலை சுமந்து வெளியே கொண்டு வந்தனர். 

கூலித் தொழிலாளியான அம்பலாலின் இளைய மகள் கமலா. அவரது மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமான நிலையில், தற்போது கமலாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web