இளம்பெண் மீது அரிக்கும் திரவத்தை ஊற்றி கொடூரம் - டெல்லியில் அதிர்ச்சி!

 
ஆசிட் இளம்பெண் மீது தாக்குதல்

டெல்லியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 24 வயது இளம்பெண் மீது நபர் ஒருவர் அரிக்கும் தன்மையுள்ள திரவத்தை ஊற்றித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் கோண்டா சௌக் பகுதியில், நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த 24 வயது இளம்பெண் மீது 41 வயது நபர் ஒருவர் அரிக்கும் தன்மையுடைய திரவத்தை ஊற்றித் தாக்குதல் நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 6 மாதங்களாக அறிமுகமான நபர் ஒருவர் மீதுதான் இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய குற்றவாளியைக் காவல்துறையினர் விரைவாகக் கைது செய்துள்ளனர். மேலும், காயமடைந்த பெண் ஜிடிபி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.