பரிகாரம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண் பலாத்காரம் - திருப்பூரில் அதிர்ச்சி!

 
இளம்பெண்  பரிகாரம் நரபலி

திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரிகாரம் செய்வதாக ஏமாற்றித் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கோவை சரக ஐ.ஜி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலமாக ஜோதிடர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பப் பிரச்சினைக்குப் பரிகாரம் செய்வதாகக் கூறி அவரைச் சந்தித்து வந்த ஜோதிடர், பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.

இளம்பெண் பாலியல் உல்லாசம் பலாத்காரம் காதல் தற்கொலை கொலை

ஏற்கனவே தனக்குத் திருமணமாகியுள்ள விவரத்தை மறைத்து அந்தப் பெண்ணிடமிருந்து பணத்தைப் பறித்ததோடு, இது குறித்து வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என்றும் அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.