அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை... வேலைக்கு சேர்ந்த 4 நாட்களில் காவலாளி செய்த காரியம்!

 
சிறுமி பாலியல் வன்கொடுமை பலாத்காரம் கர்ப்பம் கர்ப்பிணி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடிய காவலாளியைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், நேற்றைய தினம் கட்டிடத்தின் மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த கட்டிடத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்த தரம் சிங் என்பவர், அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றத்தைச் செய்த பின் காவலாளி தரம் சிங் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தார்.

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

போலீசாரின் விசாரணையில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தரம் சிங் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்து வெறும் 4 நாட்களே ஆகியிருந்தது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், ஹெபத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தரம் சிங்கை இன்று காலை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், தரம் சிங்கை வேலைக்கு அமர்த்திய செக்யூரிட்டி ஏஜென்சி நிர்வாகத்திடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.