ஜெர்மனி ரயில் நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை!
Aug 31, 2026, 15:00 IST
ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் அதிகாலையில் நடைபெற்ற கொடூரக் கத்திக்குத்துத் தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் பவரியா மாகாணம் ரோசன்ஹிம் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட பர்ஸ்டன்பெல்ட்ப்ரூக் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
