தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம்... 2பேர் கைது!

 
பாலியல் பலாத்காரம்
 

கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னரும் பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றனர்.

பாலியல் தொல்லை

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படி தஞ்சாவூரில் இளம்பெண் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடியில் இந்த கொடூரம் சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச போலீஸ்

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெசிந்த் (23). இவர் 18 வயது கல்லூரி மாணவி ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல, தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த ரெனால்ட் (25) என்பவர், 18 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெனால்ட்டைக் கைது செய்து, போக்சோ வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.