விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.. காவல் நிலைய மரணமாக வழக்குப்பதிவு!

 
விக்னேஸ்வரன்

நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதை மாத்திரைகளை பயன்படுத்தி விற்றதாக 14 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடினார், 13 பேர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த 13 இளைஞர்களில் ஒருவர் புதுக்கோட்டை சாந்தபுரம் ஏழாவது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் விக்னேஸ்வரன். காவல் நிலையத்தில் இருந்த போதே விக்னேஸ்வரன் சுகவீனமடைந்ததாக கூறப்படுகிறது.

கொலை

இதையடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், காவல் நிலையத்தில் இருந்த 2 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் விக்னேஸ்வரன் உயிரிழந்ததாக இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதன் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் விக்னேஸ்வரனுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்தது தெரியவந்தது. அதேநேரம், விக்னேஸ்வரன் மரண வழக்கை காவல் நிலைய மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த விக்னேஸ்வரனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயபாரதியும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே, சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web